சிரம்பான், அக்டோபர்.31-
15 வயதுடைய இரண்டு பள்ளி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ரெம்பாவ் பள்ளி ஆசிரியர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில், அடுத்த விசாரணை நவம்பர் 24 ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்குகள் தொடர்பான சில மருத்துவ அறிக்கைகள் இன்னும் தயாராகவில்லை என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் நோராஸிஹா அஸ்முனி, இன்று அமர்வு நீதிமன்றத்தில் கூறியதையடுத்து, நீதிபதி சுரிதா புடின், விசாரணையை வரும் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ரெம்பாவ் பள்ளியின் ஆசிரியரான 36 வயதான முகமட் அஷ்ராஃப் அஹ்மாட், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், மதியம் 1.30 மணியளவிலும், கடந்த மே 16-ஆம் தேதி காலை 9.30 மணியளவிலும், பள்ளியின் வகுப்பறைகளில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே வேளையில், கடந்த மே 5 ஆம் தேதி, காலை 10.40 மணியளவில், மற்றொரு மாணவியிடமும், அவர் இக்குற்றத்தை புரிந்தார் என்றும் அவருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








