கோலக்கிள்ளான், செப்டம்பர்.01-
உலகில் மிகப் பரபரப்புமிக்க மிகச் சிறந்த பத்து துறைமுகங்களில் கோலக்கிள்ளான் துறைமுகமும் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகில் முன்னணி 100 துறைமுகங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதில் உலகில் மிகச் சிறந்த பத்து துறைமுகங்களில் ஒன்றாக கோலக்கிள்ளான் துறைமுகம் தேர்வாகியுள்ளது.
ஹாங் காங் துறைமுகத்தை விட முன்னணி இடத்தில் கோலக்கிள்ளான் துறைமுகம் பட்டியலிடப்பட்டுள்ளது.








