Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அமைச்சராக நியமிக்கும் விவகாரம்: பிரதமருக்கு நெருக்குதல் அளிக்கக்கூடாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமைச்சராக நியமிக்கும் விவகாரம்: பிரதமருக்கு நெருக்குதல் அளிக்கக்கூடாது

கோலாலம்பூர், ஜூன்.03-

பிகேஆர் கட்சியின் இரண்டாவது உதவித் தலைவர் என்ற முறையில் தமக்கு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று சில தரப்பினர் வலியுறுத்தி வரும் வேளையில் இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நெருக்குதல் அளிக்க வேண்டாம் என்று டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கேட்டுக் கொண்டார்.

தம்மைப் பொருத்த வரையில் பிரதமர் முடிவு எடுப்பதற்கு இடம் அளிக்க வேண்டும். நெருக்குதல் அளிக்கக்கூடாது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இன்று பண்டார் ஶ்ரீ டாமான்சாராவில் உள்ள அமானா இக்தியார் மலேசியா தலைமையகத்தில் பெண் 2.0 திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான டத்தோஸ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

பிகேஆர் தேர்தலில் அமைச்சர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் தோல்விக் கண்ட நிலையில் கட்சியின் மூன்றாவது முக்கியப் பொறுப்பான உதவித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோஸ்ரீ ரமணனுக்கு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை