Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நம்பிக்கையில்லா தீர்மானமா?  வலிமை இழந்து விட்டது எதிர்கட்சி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானமா? வலிமை இழந்து விட்டது எதிர்கட்சி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்

Share:

ஜன.11
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலமாக தமது தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எதிர்கட்சியினருக்கு போதுமான வலிமை கிடையாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தங்கள் ஆதரவாளர்களை ஏமாற்றுவதற்காகவே ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைப் போல அவர்கள் தொடர்ந்து பாசாங்குத்தனம் செய்து வருகின்றனர் என்று பிரதமர் அன்வார் குற்றஞ்சாட்டினார்.

தமது தலைமையிலான மடானி அரசாங்கம், ஆட்சியில் அமர்ந்திருக்கும் இந்த ஒரு வருடத்தில் எதிர்கட்சியினர் .இது போன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒரு முறையாவது நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து இருக்கிறார்களா? என்று அன்வார் வினவினார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்கட்சியினர் அறிவிப்புகளை மட்டுமே கடந்த ஒரு வருடமாக அள்ளித் தெளித்து வருகின்றனர். இந்த ஒரு வருடத்தில் எதுவும் நடக்கவில்லை. அதற்காக நாங்கள் காத்திருந்த நாட்களும் கடந்து விட்டன என்று அன்வார் தெரிவித்தார்.

எனவே எதிர்கட்சியினரின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பற்றிய சிந்திப்பதற்ககோ, பேசுவதற்காகோ நமக்கு நேரமில்லை. காரணம், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் அளவிற்கு அவர்களிடம் வலிமையில்லை என்றே கருத வேண்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்