May 22, 2026
Thisaigal NewsYouTube
இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் மீது குற்றச்சாட்டு

Share:

மூவார், மே 20-

மாணவி ஒருவரிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக பதின்ம வயது இளைஞர் ஒருவர் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

18 வயது அந்த இளைஞர் நீதிபதி அபு பக்கர் மனாத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு இரு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அக்குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14 (a) மற்றும் (b) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 10 ஆம் தேதி மாலை 3 மணியளவில் மூவாரிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் 13 வயதுடைய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் மீது குற்றச... | Thisaigal News