பொது இடத்தில் ஓர் ஆணுடன் அநாகரீகமான செயலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் வயது குறைந்த பெண்ணை கைவிலங்கிட்டு, நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த போலீசாரின் நடவடிக்கைக் குறித்து மூடா கட்சி இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதே வேளையில், 17 வயதுடைய அந்தப் பெண் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜொகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாயில் கார் ஒன்றுக்குள் நிகழ்ந்ததாக கூறப்படும் அச்சம்பவத்தில், அவர்களின் குற்றவியல் தன்மைக் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றாலும், ஒரு மாணவி என்று நம்பப்படும் வயது குறைந்த பெண்ணைக் கைவிலங்கிட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுவது ஏற்புடையதுதானா? என்று மூடா கட்சியின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் டோபீ சியூவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் தொடர்பில், உள்துறை அமைச்சரும், போலீஸ் படைத் தலைவரும் பதிலளிக்க வேண்டுமென்று டோபீ சியூவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


