சிலாங்கூரில் 5.8 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டத்தின் வாயிலாக விபத்துக்கான காப்புறுதி பாதுகாப்பை பெறுகிறார்கள் என அறிவித்திருக்கிறார் சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷார.
பெலக்சனான் ஸ்கிம் இன்சான் தகாஃபுல் திட்டத்திற்கு 9 மில்லியன் வெள்ளியும் ஸ்கிம் இன்சான் கொன்வென்ஷ்னல் திட்டத்திற்கு 12 மில்லியன் வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். .
இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை மொத்தம் 5 மில்லியன் 879 ஆயிரத்து 600 பேர் இந்த காப்புறுதி திட்டத்திற்கு முன்பு பதிவு
செய்துள்ளனர்.
சிலாங்கூர் மாநில மக்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தக் காப்புறுத் திட்டத்தில் 6 மில்லியன் பேரை பதிவு செய்யத் தாங்கள் திட்ட்மிட்டுள்ளதாக அமிருடின் ஷாரி மேலும் தெரிவித்தார்.








