Sep 28, 2026
Thisaigal NewsYouTube
5 பேரை காவு வாங்கிய ராவூப் தீவிபத்திற்கு மின்கசிவே  காரணம்
தற்போதைய செய்திகள்

5 பேரை காவு வாங்கிய ராவூப் தீவிபத்திற்கு மின்கசிவே காரணம்

Share:

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி, ராவ், கம்பங் பாமா குலாட்-இல் உள்ள ஒரு வீட்டில், ஐந்து குடும்ப உறுப்பினர்களின் உயிரைப் பறித்த தீ விபத்திற்கு, மின்கசிவு தான் காரணம் என பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பக்ருதீன் அரிஃப் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையான JBPM நடத்திய விசாரணையில், ஒழுங்கற்ற வயரிங் அமைப்பால் ஏற்பட்ட மின்கசிவு கண்டறியப்பட்டதாக ஊராட்சி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்நுட்பக் குழுத் தலைவருமான பக்ருதீன் அரிஃப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பகாங் மாநில அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், தீயணைப்பான்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக தண்ணீரால் அணைக்க இயலாத மின்சாரம் அல்லது எரிவாயு சம்பந்தப்பட்ட தீயை அணைக்க தீயணைப்பான்கள் பயன்படுவதாகவும் பக்ருதீன் அரிஃப் விவரித்துள்ளார்.

Related News