கோலாலம்பூர், செப்டம்பர்.24-
பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில், எஸ்பிஆர்எம்மின் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செப்டம்பர் 23-ஆம் தேதி, அவரது வீட்டில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதையும், அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதையும் எஸ்பிஆர்எம் உறுதிச் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறையுடன் இணைந்து விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதாகவும் எஸ்பிஆர்எம் அறிவித்துள்ளது.
அதே வேளையில், தவறான நடத்தை மற்றும் சட்ட மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பிஆர்எம் எச்சரிக்கை விடுத்துள்ளது.








