Feb 5, 2026
Thisaigal NewsYouTube
இந்து ஆலயங்களுக்கு எதிரான பேரணியைத் தடுக்க இந்திய எம்பிக்கள் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

இந்து ஆலயங்களுக்கு எதிரான பேரணியைத் தடுக்க இந்திய எம்பிக்கள் வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.05-

சட்டவிரோத இந்துக் கோயில்களுக்கு எதிராக இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பேரணியை அனுமதிப்பது இனவாதப் பதற்றத்தைத் தூண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று எச்சரித்துள்ளனர்.

இந்தப் பேரணியானது இந்திய சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்திய எம்பிக்கள் குற்றம் சாட்டினர்.

தனியார் நிலங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் தொடர்பான சிக்கல்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதில் பேரணி ஏற்பாட்டாளர்களுக்குத் துளியும் விருப்பமில்லை என்று நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் தலைமையில் திரண்ட இந்திய எம்பிக்கள், இந்தப் பேரணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

நாங்கள் பேச்சு சுதந்திரத்தையும், ஒன்று கூடும் உரிமையையும் ஆதரிக்கிறோம். ஆனால் அதே சமயம், ஒரு கூட்டம் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக அமையும் பட்சத்தில், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்.

‘சட்டவிரோதக் கோயில்களுக்கு எதிரான கூட்டம்' என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்வு, நமது பல இன மற்றும் பல சமயச் சமூகத்திடையே பிளவை ஏற்படுத்தி பெரும் சர்ச்சைகளை உருவாக்கக்கூடும் என்று ராயர் அச்சம் தெரிவித்தார்.

இந்த பேரணியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத், சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து இந்துக் கோயில்களையும் அகற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார் என்று ராயர் குறிப்பிட்டார்.

Related News