Feb 5, 2026
Thisaigal NewsYouTube
ஊடகச் சுதந்திரத்திற்காக 'மலேசிய ஊடக மன்றம்' வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் விருப்பம்
தற்போதைய செய்திகள்

ஊடகச் சுதந்திரத்திற்காக 'மலேசிய ஊடக மன்றம்' வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் விருப்பம்

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.05-

மலேசியாவில் ஊடகச் சுதந்திரத்தை உறுதிச் செய்வதற்காக மலேசிய ஊடக மன்றத்தின் பங்கு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புவதாகத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் பிரதமர் தன்னைத் தொலைபேசியில் அழைத்து இது குறித்து விவாதித்ததாக அமைச்சர் ஃபாமி கூறினார். ஊடக மன்றத்தைப் பலப்படுத்துவது அவசியமானது என்று பிரதமர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் முதிர்ச்சிக்கு ஏற்ப, ஊடகங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்குவதற்கும், அது தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்வதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

தொழில்நுட்பச் சவால்கள் மற்றும் விளம்பர வருவாய் இழப்பு போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் ஊடக நிறுவனங்களுக்கு உதவ அரசாங்கம் இந்த நிதியை வழங்குகிறது. ஊடகத் துறையின் எதிர்காலம் மற்றும் பத்திரிகையாளர்களின் உண்மையான தேவைகள் குறித்து விவாதிக்க, மலேசிய ஊடக மன்றம் மிகவும் பொருத்தமான அமைப்பாகக் கருதப்படுகிறது. எனவே, அரசாங்கம் இந்தத் தன்னார்வ அமைப்புடன் மேலும் பேச்சு வார்த்தைகளை நடத்தும் என்று டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்ததாக தொடர்புத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

இந்து ஆலயங்களுக்கு எதிரான பேரணியைத் தடுக்க இந்திய எம்பிக்கள் வலியுறுத்தல்

இந்து ஆலயங்களுக்கு எதிரான பேரணியைத் தடுக்க இந்திய எம்பிக்கள் வலியுறுத்தல்

அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் சாரா (SARA) நிதி உதவி: பிப்ரவரி 9 முதல் வழங்கப்படும்

அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் சாரா (SARA) நிதி உதவி: பிப்ரவரி 9 முதல் வழங்கப்படும்

பயணிகள் இனி My50-இல் சேமிப்பைத் தெரிந்து கொள்ளலாம்: பயன்பாட்டை அதிகரிக்க புதிய வசதி

பயணிகள் இனி My50-இல் சேமிப்பைத் தெரிந்து கொள்ளலாம்: பயன்பாட்டை அதிகரிக்க புதிய வசதி

பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பேருந்து ஓட்டுநருக்கு  7 நாட்கள் தடுப்புக் காவல்

பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பேருந்து ஓட்டுநருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

NGO செயலாளர் கைது: 4.2 மில்லியன் ரிங்கிட் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகம்

NGO செயலாளர் கைது: 4.2 மில்லியன் ரிங்கிட் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகம்

தினமும் சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: அமைச்சர் ரமணனின் அதிரடி அறிவிப்பு

தினமும் சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: அமைச்சர் ரமணனின் அதிரடி அறிவிப்பு