Jun 28, 2026
Thisaigal NewsYouTube
தம்பின்: பாதாளச் சாக்கடை குழி விபத்தில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு எஸ். வீரப்பன் ஆறுதல்
தற்போதைய செய்திகள்

தம்பின்: பாதாளச் சாக்கடை குழி விபத்தில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு எஸ். வீரப்பன் ஆறுதல்

Share:

தம்பின், பிப்ரவரி.05-

தம்பின், ஜாலான் புங்கா தஞ்சோங் அருகே பாதாளச் சாக்கடை குழிக்குள் விழுந்து உயிரிழந்த லாய் யோங் சி (Lai Yong Chi) என்பவரது குடும்பத்தினரை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வீரப்பன் நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் லாய் யோங் சி, தனது சகோதரர் லாய் யோங் மெங்-குடன் இரவு உணவை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கட்டுமானப் பகுதியில் மோதியதில், யோங் சி அருகில் இருந்த ஆழமான பாதாளச் சாக்கடை குழிக்குள் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவரது சகோதரர் காயமின்றி உயிர் தப்பினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல், விபத்து நிகழ்ந்த இடத்திற்கும் எஸ். வீரப்பன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அங்கு நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட அவர், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் சம்பந்தப்பட்ட திட்டத்தை உடனடியாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இந்த இக்கட்டான சூழலில் தவிக்கும் குடும்பத்தினருக்குத் தேவையான மனவலிமையையும் ஆறுதலையும் அவர் நேரில் பகிர்ந்து கொண்டார்.

Related News