Feb 5, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் சாரா (SARA) நிதி உதவி: பிப்ரவரி 9 முதல் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் சாரா (SARA) நிதி உதவி: பிப்ரவரி 9 முதல் வழங்கப்படும்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.05-

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் மைகாட் மூலம் ஒரே முறையில் வழங்கப்படும் 100 ரிங்கிட் உதவித்தொகை, வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

இதற்கான தகுதியை இன்று முதல் sara.gov.my என்ற இணையதளத்தின் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 2.2 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் தொகை தகுதியுள்ளவர்களின் மைகாட்டில் தானாகவே வரவு வைக்கப்படும். இந்தத் தொகை 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அவர் விளக்கினார்.

மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்க அறிமுகப்படுத்தப்பட்ட Sumbangan Asas Rahmah எனும் SARA திட்டத்தின் ஒரு பகுதியாக இது விளங்கும் என்று மக்களையில் அமைச்சர் அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.

Related News