Nov 14, 2025
Thisaigal NewsYouTube
கெடா மாநில ஆதாரமில்லா உரிமைக் கோரல்: பினாங்கு கூட்டரசு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் - குமரன் கிருஷ்ணன்
தற்போதைய செய்திகள்

கெடா மாநில ஆதாரமில்லா உரிமைக் கோரல்: பினாங்கு கூட்டரசு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் - குமரன் கிருஷ்ணன்

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.14-

கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 1(2) குறிப்பிடப்பட்டுள்ளது போல மலேசியக் கூட்டமைப்பில் பினாங்கு மாநிலம் ஓர் இறையாண்மை கொண்ட மாநிலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிட்டு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன்.

இந்தக் குற்றச்சாட்டு சட்டப்பூர்வமாகச் செல்லாது எனவும் கூட்டரசு அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது எனவும் அவர் தெரிவித்தார்.

1957ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மற்றும் கெடா இடையிலான அனைத்து காலனித்துவ ஒப்பந்தங்கள் கூட்டரசு அரசியலமைப்பு மாற்றியமைத்த போது பினாங்கு இறையாண்மை உறுதிப்படுத்தப்பட்டதோடு நாட்டின் உச்சச் சட்டமாக அறிவிக்கப்பட்டதால் அதற்கு முந்தைய வரலாற்று ஆவணங்கள் தற்போது உள்ள மலேசியா சட்ட அமைப்பில் பொருந்தாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பினாங்கு நிலைத்தன்மை நோக்கி வளர்ந்த மாநிலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது எல்ஆர்டி LRT, யுடிசி பினாங் சென்ட்ரல் UTC PENANG SENTRAL, ஜுரு - சுங்கை டூவா நெடுஞ்சாலைத் திட்டம் போன்ற பில்லியன் கணக்கான மதிப்புள்ள முதலீடுகளில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த ஆதாரமற்ற வரலாற்று உரிமைக் கோரல்கள் பிரச்சனைகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சீர்குலைய வைப்பதோடு பல வேலை வாய்ப்புகளையும் இழக்கச் செய்யும் என அவர் மேலும் சாடினார்.

எனவே அதற்கு மாறாக, கெடா, பினாங்கு, பெர்லிஸ் என வடக்கு பொருளாதார மண்டலத்தில் ஒன்றாகச் செயல்பட்டு சுற்றுலாத்துறை, நவீன விவசாயம், தொழில்துறை என அனைத்திலும் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அதோடு, கூட்டரசு அரசியல் அமைப்பின் கீழ் நல்லிணக்கத்துடன் இறையாண்மையையும் உரிமைகளையும் பினாங்கு பாதுகாக்கும் எனவும் மடானி அரசின் கீழ் வளமாகச் செயல்படும் எனவும் குமரன் உறுதியளித்தார்.

Related News