Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்
தற்போதைய செய்திகள்

தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்

Share:

ஜன.5
2024 ஆம் ஆண்டிற்கான தை மாத​த்தின் முதல் நாளான தைப்பொங்கல், வரும் ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு, இறைவனுக்கும் நன்றி சொல்லும் பண்டிகையாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் அன்று, பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரத்தை மலேசிய இந்து சங்கம் அறிவித்துள்ளது.

பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம், ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரையாகும். அல்லது காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொங்கல் வைக்கலாம். மாலையில் பொங்கல் வைக்க விரும்புகின்றவர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொங்கல் வைக்கலாம். இருப்பினும் காலையில் பொங்கல் வைப்பதே சிறந்த உகந்த நேரமாகும்.

தைமாதம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.58 மணிக்கு பிறக்கிறது, எனவே தைப்பொங்கல் ​சூரிய வழிபாட்டிற்கு உகந்தது என்பதால் மறுநாள் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் திருநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூசன் தங்க. கணேசன் ஓர் அறிக்கை​யில் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்