Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குறைந்த பட்சம் சம்பளம் 1,800 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

குறைந்த பட்சம் சம்பளம் 1,800 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட வேண்டும்

Share:

அரசாங்க ஊழியராக புதியதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக 1,800 வெள்ளி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பொதுச் சேவை ஊழியர்களின் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கியூபெக்ஸ்​ முன்மொழிந்த புதிய கூட்டு சம்பள பேச்சுவார்த்தை பரிந்துரையில் குறைந்த பட்ச சம்பள கோரிக்கைக்கையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அட்னான் மாட் தெரிவித்தார்.

நேற்று புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை கியூபெக்ஸ், பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது இந்த கோரிக்​கைக்கு ​அ​தீத அழுத்தம் கொடுக்கப்பட்டதையும் அட்னான் மாட் சுட்டிக்காட்டினார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க வகை செய்த மலேசிய ஓய்வுதிய சம்பள முறையான எஸ்.எஸ்.எம், ஆகக்கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி அமல்படுத்தப்பட்டதையும் அட்னான் மாட் விளக்​கினார்.

Related News