Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி
தற்போதைய செய்திகள்

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

Share:

புத்ராஜெயா, ஜனவரி.21-

ஈப்போவில் பிறந்து 24 ஆண்டுகளாக குடியுரிமைக்காகப் போராடி வரும் ஹரிதரன் முகுந்தன், கால்பந்து வீரர்களுக்கு எளிதாகக் குடியுரிமை வழங்கப்படும் நிலையில் தனக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசியத் தந்தைக்கும் தாய்லாந்து தாய்க்கும் பிறந்த இவருக்கு, ஒரு வயதில் மலேசியக் கடப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, அவரது பிறப்புச் சான்றிதழில் அவர் மலேசியர் அல்ல என்று குறிப்பிடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த போதிலும், அடையாள அட்டையான மைகாட் இல்லாததால் உயர்கல்வி கடன் பெறுவதிலும், தனது திருமணத்தைப் பதிவு செய்வதிலும் அவர் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.

இவ்வழக்கில் ஹரிதரன் தரப்பு வழக்கறிஞர் ஆர். ரேணுகா ராமையா வாதிடுகையில், மலேசியாவுடன் எந்த வரலாற்றுத் தொடர்பும் இல்லாத வெளிநாட்டு கால்பந்து வீரர்களுக்கு ‘ஹரிமாவ் மலாயா’ அணியில் விளையாடுவதற்காக எளிதில் குடியுரிமை வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டினார். மேலும், ஹரிதரனைப் போன்றே மலேசியத் தந்தைக்கும் வெளிநாட்டுத் தாய்க்கும் பிறந்த Nalvin Dhillon என்பவருக்கு நீதிமன்றம் மூலம் குடியுரிமை கிடைத்துள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் ஹரிதரனுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த கூட்டரசு வழக்கறிஞர் Shahidah Nafisah Leman, ஹரிதரனுக்குக் கடப்பிதழ் வழங்கப்பட்ட காலத்தில் குடிநுழைவுத் துறை மற்றும் தேசியப் பதிவுத் துறையின் தரவுகள் ஒன்றிணைக்கப்படவில்லை என்றும், கடப்பிதழ் வைத்திருப்பது மட்டுமே ஒருவருக்குக் குடியுரிமை பெற்றுத் தந்துவிடாது என்றும் வாதிட்டார்.

மேலும், தாய்லாந்து சட்டப்படி ஹரிதரன், அந்த நாட்டு குடியுரிமையைப் பெற வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பு கூறியது. இருப்பினும், தான் பிறந்தது முதல் மலேசியாவை விட்டு வெளியேறியதில்லை என்றும், தனக்கு வேறு எந்த நாட்டு குடியுரிமையும் இல்லை என்றும் ஹரிதரன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்