கோலாலம்பூர், செப்டம்பர்.02-
நாடெங்கிலும் வார இறுதி நாட்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 328 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடெங்கிலும் 395 பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், முறையான அனுமதியின்றி அங்கு சூதாட்டம் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் எம். குமார் கூறுகையில், பொழுதுபோக்கு மையங்கள் என்ற பெயரில் லாட்டரி டிக்கெட் விற்பனை, இணையச் சூதாட்டம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, அதனை நடத்தி வந்தவர்களில் 286 ஆண்களும், 42 பெண்களும் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் எம். குமார் குறிப்பிட்டுள்ளார்.








