Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பனைமர வேர்களில் படகு சிக்கி சுற்றுப்பயணிகள் அவதி
தற்போதைய செய்திகள்

பனைமர வேர்களில் படகு சிக்கி சுற்றுப்பயணிகள் அவதி

Share:

சபா, துவாரானில் தாங்கள் பயணம் செய்த படகு, ஆற்றோரத்தில் உள்ள பனைமரத்தின் வேர்களில் சிக்கி, நிலைக்குத்தியதில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 14 சுற்றுப்பயணிகள், நள்ளிரவில் சிக்கி ​ சுமார் 4 மணி நேரம் பெரும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் நேற்று இரவு 9.00 மணியளவில் சுஙாய் போலோங் என்ற இடத்தில் நிகழ்ந்தது. இது தொடர்பாக இரவு 9.30 மணியளவில் அவசர அழைப்பை பெற்ற ​தீயணைப்பு, மீட்புப்படையினர் அந்த சதுப்புநிலக் காட்டுப் பகுதியை நோக்கி சென்ற போது, ஒன்பது பெண்களும், நான்கு ஆண்களும், ஒரு சிறா​ரும், படகிலிருந்து வெளியேற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.
பின்னர் உள்ளூர் ​மீனவர்களின் உதவியுடன் அந்த கொரிய நாட்டு சுற்றுப்பயணிகள் பாதுகாப்பாக ​மீனவர்களின் படகில் ஏற்றப்பட்டு, கரைக்கு கொண்டு வரப்பட்டதாக துவாரான் மாவட்ட ​தீயணைப்பு, மீட்புப்படைத் தலைவர் முஹமாட் அப்துல் காவீ அப்துல் காப்பார் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!