பினாங்கு மாநிலம் கெடாவிற்கு சொந்தமானது என்பதை காட்டுவதற்கு கூட்டரசு அரசிலமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் விடுத்துள்ள கோரிக்கையானது, தாம் தவறு இழைத்து இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்துதான் பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்று காட்ட வேண்டுமானால், பினாங்கு மாநிலம், மலாயா கூட்டரசில் இணையாண்மைக் கொண்ட ஒரு மாநிலம் என்பதை சனூசி ஒப்புக்கொண்டுள்ளார் என்று ராயர் குறிப்பிட்டார்.
நாட்டில் பொது அமைதியை சீர்குலைத்து, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்ற அடிப்படை வாதத்தை சனூசி முன்வைத்து வருகிறார் என்று ராயர் தெரிவித்தார்.
முன்னதாக, கெடா மந்திரி புசாருக்கு எதிராக பினாங்கு, தீமூர் லாவுட் போலீஸ் நிலையத்தில் ராயர் புகார் ஒன்றை செய்துள்ளார். போலீஸ் நிலையத்தில் ராயருடன் பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவாங் எங்கும் காணப்பட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


