மலாக்கா, மே.18-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படக் கூடும் என அம்மாநில பாரிசான் நேஷனல் தலைவர் Ab Rauf Yusoh தெரிவித்துள்ளார்.
மலாக்கா மாநில முதலமைச்சருமான அவர், மாநில சட்டமன்றத்தின் காலம் வரும் டிசம்பரில் நிறைவடைவதால், அதற்கு மிக அருகில் தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரமலான் மற்றும் ஹரி ராயா Aidilfitri கொண்டாட்டங்கள் வருவதால், தேர்தல் பிரசார காலம் அதனுடன் மோதும் சூழல் ஏற்படலாம் என்றும் Ab Rauf Yusoh விவரித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த 120 நாட்களுக்குள் தேர்தல் நடத்துவதற்கான ஏற்ற காலத்தை கண்டறிய முயற்சிப்போம் என்று நேற்று இரவு தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 21 தொகுதிகளில் பாரிசான் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.








