லஞ்ச ஊழல் தொடர்பில் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் வலைவீசி வருகிறது.
முகைதீன் யாசின் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கான பதிவு, ஆள் எடுப்பு மற்றும் பயோமெட்ரிக்ஸ் பாதுகாப்பு முறை ஆகியவை தொடர்பான குத்தகை திட்டத்தில் முறைக்கேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையில் முகைதீனின் மருமகன் முஹம்மது அட்லான் பெர்ஹான் மற்றும் 69 வயது மன்சூர் சாத் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.
அவ்விருவரையும் விசாரணைக்கு அழைக்க எஸ்.பி.ஆர்.எம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், பயன் அளிக்கவில்லை என்று அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








