பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை விரைவில் சீரமைக்கப்படவிருக்கிறது. அமைச்சரவையின் சீரமைப்புக்கான பணிகளை பிரதமர் துறை முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாக நெருக்கமான வட்டாரங்கள் தெவித்துள்ளன.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் சில அமைச்சுக்களின் தலைமைச் செயலாளர்கள் மாற்றங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்த நிலையில் பெரிக்காத்தான் நேஷனலிடமிருந்து சில எதிர்மறையான தாக்குதல்களை ஒற்றுமை அரசாங்கம் மேற்கொண்டாலும் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அமைச்சரவை சீரமைப்பு குறித்து பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


