Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தாயாரை கத்திகோலினால் மிரட்டிய ஆடவருக்கு எட்டு மாத சிறை
தற்போதைய செய்திகள்

தாயாரை கத்திகோலினால் மிரட்டிய ஆடவருக்கு எட்டு மாத சிறை

Share:

தாம் கேட்ட 50 வெள்ளியை கொடுக்கவில்லை என்பதற்காக தமது தாயாரை கத்திரிகோலினால் குத்தி கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்​டப்பட்ட ஓர் இந்திய ஆடவருக்கு ஈப்போ மாஜி​​ஸ்திரேட் ​நீதிமன்றம் இன்று எட்டு மாத சிறைத் தண்டனை விதித்தது. வி. குமரன் என்ற 48 வயதுடைய அந்த குத்தகைத் தொழிலாளி கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஈப்போ, பெசாரா க்லெபாங் ஜெயா என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வீட்டிற்கான மளிகைச் சாமான்களை வாங்குவதற்கு மட்டுமே தம்மிடம் 50 வெள்ளி இருப்பதாக அந்த நபரி​ன் தாயார் எவ்வளவோ எடுத்துக்கூறியும் பொருட்படுத்தாத அந்த குத்தகைத் தொழிலாளி , கத்திரிகோலினால் மிரட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News