Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் பாதுகாப்பாகவே உள்ளன
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் பாதுகாப்பாகவே உள்ளன

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.14-

பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் பொதுவாக பாதுகாப்பான சூழலிலேயே இருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

எனினும் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு ஒவ்வொரு பள்ளியுடனும் தொடர்பில் உள்ள போலீஸ் அதிகாரி மற்றும் ரோந்து போலீசார் தொடர்ந்து பள்ளிகளைக் கண்காணித்த வண்ணம் உள்ளனர். எனவே பள்ளிகளில் போலீஸ்காரர்களை நிரந்தரமாகப் பணிக்கு அமர்த்த வேண்டிய அவசியமில்லை என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

பள்ளி நிர்வாகத்திற்கும், போலீஸ் துறையினருக்கும் இடையிலாான ஒத்துழைப்பைக் கருத்தில் கொள்ளும் போது பள்ளிகள் பாதுகாப்பபான நிலையிலேயே உள்ளது என்று டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள்,போதுமானதாகவே உள்ளது என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐஜிபி குறிப்பிட்டார்.

போலீஸ் துறையில் உள்ள தரவுகளின் படி நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயிலும் வேளையில் சுமார் 4 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

Related News