Dec 8, 2025
Thisaigal NewsYouTube
24 மணி நேர பாலியல் தொழில் மையம்: 112 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 139 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

24 மணி நேர பாலியல் தொழில் மையம்: 112 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 139 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

கோலாலம்பூரின் ஜாலான் பெட்டாலிங், ஜாலான் இம்பி, ஜாலான் புடு ஆகியப் பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்ட 13 பாலியல் தொழில் மையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் மொத்தம் 139 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பிடிபட்டவர்களில், இந்தோனேசியா, மியான்மார், வங்காளதேசம், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 112 பெண்களும் அடங்குவர். இம்மையங்கள் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் இயங்கி வந்ததாக குடிநுழைவுத் துறையின் செயலாக்கப் பிரிவின் இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.

இந்தச் சோதனையின் போது, உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய ஒரு ஷிஃப்டில் செயல்பட்ட இந்த மையங்களில், சேவைக் கட்டணம் 60 ரிங்கிட் என மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 20 உள்ளூர் ஆட்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தப் பாலியல் மையங்கள் சட்டத்திற்குப் புறம்பானச் சுவர்களை அமைத்து, கட்டடத்தின் வடிவமைப்பை மாற்றி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Related News