கோலாலம்பூர், ஜூலை.23-
கோலாலம்பூரில் டேசா பண்டானில் பெரும் சர்ச்சைக்கு இடமாக மாறிய சட்டவிரோத அங்காடிக் கடைகள் உடைக்கப்படும் விவகாரத்தில் அந்தக் கடைகள் உடைக்கப்படாது என்று தித்திவங்சா எம்.பி. ஜொஹாரி கானி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அந்த சட்டவிரோதக் கடைகளை உடைப்பதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் முற்பட்ட போது, உள்ளுர்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஒரு நபர், பாராங்கை ஏந்திக் கொண்டு போலீசாருக்கு மிரட்டல் விடுத்தது பெரும் சர்ச்சையானது.
எனினும் கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் மைமூனா ஷாரிஃப் மற்றும் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபாவுடன் நடத்தப்பட்டப் பேச்சு வார்த்தையின் பலனாக அந்தக் கடைகளை உடைக்கப்படுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தோட்டம் மற்றும் மூலத் தொழில்துறை அமைச்சருமான ஜொஹாரி தெரிவித்தார்.








