Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தமது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தமது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறினார்

டிச. 8-

கடந்த நவம்பர் 30 அன்று பகாங் மாநிலத்தின் பெந்தோங், கராக் பகுதியில் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட 41 வயது S. திலகவதி,, தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெந்தோங் மாவட்டக் காவல் துறை தலைவர் Superintenden Zaiham Mohd Kahar கூறுகையில், அந்த பெண் பேரா மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தகவல் அளித்த பிறகு, தமது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறினார் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையை மக்கள் பகிர்ந்துகொண்டதற்கு, குறிப்பாக பெந்தோங் மக்களுக்கு நன்றி தெரிவித்த Zaiham, கடந்த வியாழக்கிழமை, திலகவதியின் கணவர் அளித்த புகாரின் பேரில், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறினார் | Thisaigal News