Oct 9, 2026
Thisaigal NewsYouTube

காவல் துறைத் தலைவர் பற்றிய பொய்யான செய்தி: ஊடகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காவல் துறைத் தலைவர் பற்றிய பொய்யான செய்தி:   ஊடகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது

கோலாலம்பூர், ஜூன்.22-

புதிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலை அரசியல் கட்சியுடன் இணைத்து வெளியிட்ட செய்திக்கு மலேசியக் காவல்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் முதல்நிலை காவல்துறை அதிகாரி எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராகவோ அல்லது எந்தப் பதவியிலும் இருந்ததில்லை என்று பிடிஆர்எம் செயலாளர் டத்தோ கமருஸாமான் அப்துல்லா கூறினார்.

இந்தச் செய்தி தவறானது, தவறாக வழிநடத்துவது, நாட்டின் பாதுகாப்புப் படையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் ஒரு தவறான கருத்தை உருவாக்குகிறது. சரிபார்க்கப்படாதத் தகவல்களை வெளியிட்ட ஊடகத்தின் அலட்சியத்தையும் பிடிஆர்எம் கடுமையாகக் கண்டித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →