Jul 29, 2026
Thisaigal NewsYouTube
Geng K- Boy கும்பல் முறியடிப்பு, எழுவர் கைது
தற்போதைய செய்திகள்

Geng K- Boy கும்பல் முறியடிப்பு, எழுவர் கைது

Share:

சீரம்பன், ஜூலை 2-

வீடு புகுந்து திருடுதல், வாகனங்களை களவாடுதல் போன்ற குற்றங்களை புரிந்து வந்துள்ள Geng K- Boy என்ற கொள்ளைக் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

அந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று நம்பப்படும் ஆடவர் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கோலாலம்பூர், ஜோகூர்பாரு மற்றும் பேராவில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மூளையாக செயல்பட்டவருக்கு அப்பாற்பட்ட நிலையில் மூவர், வீடு புகுந்து திருடுதல் மற்றும் வாகனங்களை களவாடுதல் முதலிய குற்றங்களை புரிந்து வந்துள்ளனர். இதர மூவர் மேற்கண்ட குற்றங்கள் நடைபெறுவதை அறிந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ உசேன் உமர் தெரிவித்தார்.

உளவுப்பிரிவு மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கோம்பாக் மாவட்ட போலீஸ் குழு மேற்கொண்ட நடவடிக்கையில் 31 க்கும் 54 க்கும் இடைப்ட்ட வயதுடைய இந்த எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள் ஆவர் என்று டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்