Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒரு வாடகை வீட்டில் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு வாடகை வீட்டில் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

டிச. 15-

தங்காக் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற 17 வீட்டுக் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு ஜோடி காதலர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முறையே, 25, 44 வயதுடைய மலேசியர்களான இவர்கள் கடந்த 10ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு தங்காக் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கைது குறித்து தாங்கக் மாவட்டக் காவல் துறைத் தலைவர், Superintendan Roslan Mohd.Talib கூறுகையில், அவர்களைக் கைது செய்ததையடுத்து, காவல் துறையினர் நகைகளை விற்ற ரசீதுகள், 11 ஆயிரத்து 795 ரிங்கிட் ரொக்கம், தங்கச் சங்கிலியின் அடகு ரசீது, மோட்டார் சைக்கிள் வாங்கிய ரசீது, அ Amanah Saham Nasional Berhad அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆரம்ப விசாரணையில், இந்த ஜோடி இரவு நேரங்களில் வீட்டில் யாரும் இல்லாத சமயம், இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த ஜோடிக்கு 17 முந்தைய குற்ற பதிவுகள் உள்ளன.
வீடுகளின் பின்புறம் ஏறி, பின்னர் வீட்டின் கூரை வழியாக உள்ளே நுழைந்து பணம், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றனர். இவர்கள் வீட்டுக் கொள்ளை குற்றச்சாட்டின் கீழ் இந்த வாரம் புதன்கிழமை வரை எட்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →