கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, கோம்பாக், பத்துகேவ்ஸில் உள்ள தங்கள் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் லிப்டில் ஏறுவதற்கு முற்பட்ட ஒரு தம்பதியர் மீது எரிதிரவக வீச்சு நடத்தியதாக நம்பப்படும் 60 வயது மாது கைது செய்யப்பட்டள்ளார்.
ஜுலை 4 ஆம் தேதி அதிகாலை 1.37 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தீவிர புலன் விசாரணையில் அந்த மாது, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் ரவாங், தாமான் எம் ரெசிடென்ஸு யில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக கேம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அரிஃப்ஃபின் அரிஃப்ஃபின் நாசிர் தெரிவித்தார்.
இந்த எரிதிரவத் வீச்சில் 60 வயது மனைவி மற்றும் 37 வயது கணவர் முகத்திலும்,உடலிலும் தீக்காயங்களுக்கு ஆளாகி, செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அந்த தம்பதியருடன் இருந்த அவர்களின் 14 வயது மகன் காயமடையவில்லை. இந்த தாக்குதல் தொடர்பில் பிடிபட்ட மாதுவை விசாரணைக்கு ஏதுவாக தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ள வேளையில் அதன் பின்னணியை ஆராய்ந்து வருவதாக நோர் அரிஃப்ஃபின் அரிஃப்ஃபின் நாசிர் குறிப்பிட்டார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


