Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஐவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஐவர் மீது குற்றச்சாட்டு

கோட்டா திங்கி , செப்டம்பர் 26-

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி ஜோகூர், பந்தர் தெங்கரா -வில் குடிநீர் விநியோக சேவை பராமரிப்பு பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் நீர் மாசு பாட்டை விளைவித்ததாக நிறுவன இயக்குநர் ஒருவர் மற்றும் பங்குதாரர் ஒருவர் உட்பட ஐவர் கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஒரு சிங்கப்பூர் பிரஜையான 41 வயது Tan Eng Yong மற்றும் உள்ளுர் பிரஜையான லௌ காம் வை ஆகியோர் உட்பட ஐவர் நீதிபதி ஹைதா ஃபரிட்சல் அபு ஹசன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

நீர் சேவையில் குறிப்பாக நீர் பராமரிப்பு பணியை நிலைக்குத்த செய்ய வேண்டும் என்ற நோக்கில் 23 வயது ஆர்.நவராஜ், 28 வயது K. பிரசாந்த் மற்றும் 52 வயது K. ஜெயகுமார் ஆகிய மூவருடன் மேற்கண்ட இருவரும் கூட்டாக சேர்ந்து பந்தர் தெங்கரா, பாசிர் இந்தான் , ஓராங் அஸ்லி கிராமத்தில் மேற்கண்ட தேதியில் சதிநாச வேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டு முதல் 40 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 124 பிரிவின் கீழ் மேற்கண்ட ஐவரும் குற்றச்சாட்டப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →