‘கெங் சூரியா’ எனப்படும் கிரிமினல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக ஒன்பது ஆடவர்கள் மீது இன்று கெடா, சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
28 வயது தயாளன், 30 வயது ஏ. தனபாலன், 28 வயது ரிஸ்வான் அப்துல் ஜாலில், 39 வயது ஜி. ஸ்ரீதரன், 38 வயது பி. சரண்ராஜ், 34 வயது ஏ. சைமன், 30 வயது கும்பலின் தலைவராகக் கூறப்படும் ஜி. சூரியா பிரசாத், 52 வயது ஏ. சுரேஷ், 31 வயது கவினேஸ் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். இரு நீதிபதிகள் முன்னிலையில் தனித்தனி நீதிமன்ற அறைகளில் தமிழில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதால், குற்ற ஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை.
2024ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் வரை, சுங்கை பட்டாணி, ஜாலான் செகெராட், பெக்கான் லாமாவில் உள்ள ஒரு வீட்டில் கிரிமினல் கும்பலின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஒன்பது பேருக்கும் பிணை மறுக்கப்பட்ட நிலையில், வழக்கு நவம்பர் 17ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.








