Oct 22, 2026
Thisaigal NewsYouTube

தாபுங் ஹாஜி முன்னாள் தலைமை அதிகாரிகள் இருவர் மீது 330 கோடி ரிங்கிட் ஹிபா விவகாரத்தில் மோசடிக் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாபுங் ஹாஜி முன்னாள் தலைமை அதிகாரிகள் இருவர் மீது 330 கோடி ரிங்கிட் ஹிபா விவகாரத்தில் மோசடிக் குற்றச்சாட்டு

தாபுங் ஹாஜியின் முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரி 70 வயது ஜோஹான் அப்துல்லா, முன்னாள் தலைமை நிதி அதிகாரி 63 வயது ரோஸைடா ஓமார் ஆகிய இருவர் மீதும், 2017ஆம் நிதியாண்டுக்கான 330 கோடி ரிங்கிட் ஹிபா தொகை வழங்கப்பட்ட விவகாரத்தில், நிர்வாகக் குழுவை ஏமாற்றியதாக இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நோர்மா இஸ்மாயில் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, இருவரும் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர். தாபுங் ஹாஜியின் மூன்று கட்டடங்களின் சொத்து மதிப்பைச் சந்தை மதிப்பைவிட அதிகமாகக் காட்டி, நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெற்றதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இருவருக்கும் தலா 60 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கிய நீதிமன்றம், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதற்காக டிசம்பர் 8ஆம் தேதியை வழக்கு மறுஅழைப்பு நாளாக நிர்ணயித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஆசிரியர் மீதான தாக்குதலைச் சமூக ஊடகத்தில் நேரலை செய்த மாணவர்: சரவாக் பள்ளியில் போலிசார் தீவிர விசாரணை

ஆசிரியர் மீதான தாக்குதலைச் சமூக ஊடகத்தில் நேரலை செய்த மாணவர்: சரவாக் பள்ளியில் போலிசார் தீவிர விசாரணை

வேஸ்ஸுக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்பட்ட தூஜூ செயலியில் வழிகாட்டிச் சேவை தற்காலிக முடக்கம்

வேஸ்ஸுக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்பட்ட தூஜூ செயலியில் வழிகாட்டிச் சேவை தற்காலிக முடக்கம்

போர்டி டிக்சனில் உயரத்திலிருந்து விழுந்து கல்லூரி இறுதியாண்டு மாணவர் உயிரிழப்பு

போர்டி டிக்சனில் உயரத்திலிருந்து விழுந்து கல்லூரி இறுதியாண்டு மாணவர் உயிரிழப்பு

சரவாக் பள்ளியில் ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவம்: பொறுப்புடன் கையாள அமைச்சர் அறிவுறுத்தல்

சரவாக் பள்ளியில் ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவம்: பொறுப்புடன் கையாள அமைச்சர் அறிவுறுத்தல்

மலேசிய விமான நிலையங்களில் போதைப் பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனர்கள் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

மலேசிய விமான நிலையங்களில் போதைப் பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனர்கள் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது