அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சத்து கட்சியின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் எடுத்துள்ள முடிவை அக்கட்சியின் மாநாட்டு பேராளர்கள் இன்று ஏகனமதாக நிராகரித்துள்ளனர்.
ஷா ஆலாமில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மாநாட்டில் தலைவர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பெர்சத்து கட்சியின் 20 பேராளர்கள் இவ்விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து பதவி விலகும் முகைதீனின் முடிவை பேராளர்கள் ஒட்டுமொத்த கருத்திணக்கத்தின் அடிப்படையில் நிராகரித்தனர்.








