Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒரு காரும், மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு காரும், மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டன

ஷா ஆலாம், டிச.3-


நோயாளியை ஏற்றிக்கொண்டு, சைரன் ஒலியுன் வேகமாக சென்று கொண்டிருந்த அம்புலன்ஸ் வண்டியுடன் மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வந்து, அம்புலன்ஸ் வண்டி மட்டுமின்றி, பிற வாகனமோட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட அந்த இரு வாகனமோட்டிகளை போலீசார் அடையாளம் கண்டு இருப்பதாக ஷாஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

கூட்டரசு நெடுஞ்சாலையில் ஷா ஆலாமில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வருவதைத் தொடர்ந்து ஒரு ஹோன்டா சிவிக் காரையும், ஒரு யமஹா மோட்டார் சைக்கிளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் ஹோண்டா சிவிக் கார் ஓட்டுநர் பிடிபட்டுள்ள வேளையில் மோட்டார் சைக்கிளோட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

கூட்டரசு நெடுஞ்சாலையின் 15 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அந்த அம்பலன்ஸ் வண்டியை பின்தொடர்ந்து வேகமாக சென்று விடலாம் என்ற நோக்கில் அந்த இரு வாகனமோட்டிகளும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு விளைவித்துள்ளனர் என்று அந்த காணொளியில் தெரியவந்துள்ளதாக முகமட் இக்பால் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →