ஜோகூர் மாநிலம் கூலாய், பண்டார் புத்ரா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பெரோடுவா மைவி காரை போலீசார் சோதனையிட்ட போது, அதிலிருந்த 23 வயது மதிக்கத்தக்க காதல் ஜோடி, போலீஸ் வாகனம் மீது காரை மோதியதுடன், போலீஸ் அதிகாரிகளையும் மோத முயன்றதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து, தற்காப்பிற்காகவும் காரைத் தடுத்து நிறுத்தவும் போலீசார் அதன் டயரை நோக்கி ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எனினும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற நிலையில், சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் இருவரும் கூலாய் மற்றும் குளுவாங் பகுதிகளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருவருக்கும் நடத்தப்பட்ட ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகின்றது.








