பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படும் இரண்டு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான போலீஸ் விசாரணை, முடிவடைந்து விட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்புடின் நசுதியோன் இஸ்மாயில்தெரிவித்தார்.
மேல் நடவடிக்கைக்காக அந்த விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக சைப்புடின் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங், மற்றும் ஆராவ் எம்.பி. ஷஹிடான் கசிம் ஆகியோரே போலீஸ் விசாரணைக்கு ஆளாகியுள்ள அந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆவர் என்று சைப்புடின் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


