Sep 26, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா அடுக்குமாடி வீடுகளில் 84 சட்டவிரோதக் குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா அடுக்குமாடி வீடுகளில் 84 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

Share:

புத்ராஜெயா புத்ரா ஹர்மோனி அடுக்குமாடிக் குடியிருப்பில், “பிளாட் ஹிஜாவ்” என அழைக்கப்படும் பகுதியில் குடிநுழைவுத் துறை நடத்திய “Ops Pintu” நடவடிக்கையில் 84 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், 321 பேர் சோதனையிடப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 73 ஆண்கள், ஒன்பது பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் அடங்குவர்.

குடிநுழைவுத் துறையின் 60 அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதுடன், சிலர் அங்கு வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக புலனாய்வில் தெரிய வந்தது.

வீட்டு உரிமையாளர்கள் தங்களது குடியிருப்பாளர்களின் குடிநுழைவு நிலையை உறுதி செய்து, சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என குடிநுழைவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Related News