Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பெண்டாங் எம்.பி. நாடாளுமன்றத்திலிருந்து இடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

பெண்டாங் எம்.பி. நாடாளுமன்றத்திலிருந்து இடை நீக்கம்

Share:

கோலாலம்பூர், ஜூலை 15-

ஜெலுடோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer- ரை இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று முத்திரைக் குத்தியதற்காக கெடா, பெண்டாங் எம்.பி. அவாங் சோலாஹுதீன் ஹாஷிம், மக்களவையிலிருந்து 3 நாட்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

RSN Rayer- க்கு எதிராக அவாங் சோலாஹுதீன் பிரயோகித்த எதிர்ப்பு உணர்வு மிக்க வார்த்தையை மீட்டுக்கொள்ள அவர் தவறியதைத் தொடர்ந்து மக்களவை துணை சபா நாயகர் ராம்லி முகமது நொர் இந்த முடிவை அறிவித்தார்.

RSN Rayer- க்கு எதிராக தாம் பயன்படுத்திய அந்த வார்த்தையை மீட்டுக் கொள்ள முடியாது என்று . அவாங் சோலாஹுதீன் பிடிவாதமாக இருந்ததைத் தொடர்ந்து அவரை தற்காலிகமாக இடை நீக்கம் செய்வதாக துணை சபா நாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

நாடாளுமன்ற விவாதத்தின் போது கெடா மாநிலத்தில் சூதாட்டத்தையும், நம்பர் கடைகளையும் தற்காக்க முயற்சிக்கும் DAP- யைச் சேர்ந்த RSN ராயர், இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று அவாங் சோலாஹுதீன் முத்திரைக் குத்தினார்.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

பெண்டாங் எம்.பி. நாடாளுமன்றத்திலிருந்து இடை நீக்கம் | Thisaigal News