Oct 7, 2026
Thisaigal NewsYouTube

லாவோஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோ போதைப்பொருள் மலேசியாவில் இருந்து வரவில்லை - புக்கிட் அமான் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லாவோஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோ போதைப்பொருள் மலேசியாவில் இருந்து வரவில்லை - புக்கிட் அமான் உறுதி

லாவோஸ் அதிகாரிகளால் தனியார் ஜெட் விமானத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோ சந்தேகத்திற்குரிய மெத்தாம்பெத்தமின் வகை போதைப்பொருள் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்படவில்லை என புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.

இந்தப் போதைப்பொருள் லாவோஸிலிருந்து பெறப்பட்டு, பிலிப்பின்ஸின் மணிலா சந்தைக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் கூறுகையில், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி, லுவாங் பிரபாங் அனைத்துலக விமான நிலையத்தில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இது குறித்து லாவோஸ் அதிகாரிகள் அக்டோபர் 6-ஆம் தேதி மலேசிய போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் சுபாங் விமான நிலையத்தில் இருந்து எந்தவித பொருட்களும் இல்லாமல், அந்த தனியார் ஜெட் விமானம் லுவாங் பிரபாங்கிற்கு புறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் லாவோஸில் இருந்து போதைப்பொருளை ஏற்றிக்கொண்டு மணிலாவுக்கு கொண்டு செல்ல இந்த விமானம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் ஹுசேன் ஓமார் விவரித்துள்ளார்.

முன்னதாக, லாவோஸ் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புச் சோதனைகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி, அந்த தனியார் விமானத்தில் இருந்து 23 பெட்டிகளில் 500 பொட்டலங்களாக இருந்த 521 கிலோ மெத்தாம்பெத்தமின் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
 மோசமடையும் புகைமூட்ட நிலை - ஒரே இரவில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

மோசமடையும் புகைமூட்ட நிலை - ஒரே இரவில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை