கோல சிலாங்கூர், அக்டோபர்.13-
கோல சிலாங்கூர், ஈஜோக், தாமான் ஜாசா வீடமைப்புப் பகுதியில் இறைச்சி வெட்டும் கத்தியை ஏந்திக் கொண்டு பொது மக்களை அச்சுறுத்திய நபரை, போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்ந்தது. வெட்டுக் கத்தியை ஏந்திக் கொண்டு ஆவேசமாகச் செயல்பட்ட அந்த நபரின் நடத்தையினால் விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
அவ்விடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபருடன் பேச்சு கொடுத்து, சாந்தப்படுத்தியப் பின்னர் அவர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.
அந்த நபரை பிடிக்கும் போது சற்று அமளிதுமளி ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








