Jun 28, 2026
Thisaigal NewsYouTube
காரில் தப்பிச் செல்ல முயன்ற போது விபத்து: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் பலி
தற்போதைய செய்திகள்

காரில் தப்பிச் செல்ல முயன்ற போது விபத்து: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் பலி

Share:

அலோர் ஸ்டார், பிப்ரவரி.04-

அலோர் ஸ்டார், ஜாலான் சுக்கா மெனாந்தி அருகே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கார் ஒன்று விபத்திற்குள்ளானதில், அதில் பயணம் செய்த போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராக நம்பப்படும் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அவருடன் பயணம் செய்த மற்றொரு பெண் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.

நேற்று இரவு ஓப்ஸ் கெம்பூர் என்ற பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான வகையில் இரு பெண்கள் நடந்து கொள்வதை கவனித்துள்ளனர்.

பின்னர், அவர்கள் செலுத்திய பெரோடுவா மைவி காரை துரத்திச் சென்றுள்ளனர். அதிவேகமாகச் சென்ற அக்காரானது ஜாலான் சுக்கா மெனாந்தி நில அலுவலகம் அருகே சாலையிலிருந்து சறுக்கிச் சென்று விபத்திற்குள்ளானது.

இதில் அக்காரைச் செலுத்திய 37 வயதான பெண் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில், பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த 33 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோத்தா ஸ்டார் போலீஸ் தலைவர் சையிட் பஸ்ரி சையிட் அலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அக்காரிலிருந்து 210 கிராம் ஹெராயின் வகை போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த இரு பெண்களின் மீதும் ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் சையிட் பஸ்ரி தெரிவித்துள்ளார்.

Related News