தங்கள் பகுதிகளில் அல்லது தாங்கள் பயணம் செய்கின்ற நகரங்களில் சாலை பழுது குறித்து மக்கள் மிக எளிதாக தெரியப்படுத்துவதற்கும், புகார் அளிப்பதற்கும் பொதுப்பணித்துறை, மை ஜாலான் என்ற பிரத்தியேக செயலியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. சாலைகளில் ஏற்படும் பழுதுகள், குறிப்பிட்ட அமலாக்கத் தரப்பினரின் பொறுப்பு மட்டுமல்ல. அந்த சாலையை பயன்படுத்துகின்ற அனைவருடைய கூட்டுப்பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் பொது மக்கள் சாலை பழுது தொடர்பான விவரங்களை இந்த மை ஜாலான் செயலி வாயிலாக தெரிவிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ செரி அலெக்ஸ்சென்டர் நந்தா லிங்கி
தெரிவித்துள்ளார். சாலையில் பழுது ஏற்படும் போது, அதனை பொதுப்பணித்துறை கண்டு பிடிக்கும் வரையில் அந்த பழுது, இதர வாகனமோட்டிகளுக்கு ஓர் இடையூறாக இல்லாமல் அதனை உடனுக்கு உடன் செப்பனிடுவதற்கு பொது மக்கள் தாராளமாக சாலை தொடர்புடைய தங்கள் புகார்களை மை ஜாலான் செயலி வாயிலாக தெரிவிக்கலாம் என்று அமைச்சர் அலெக்ஸ்சென்டர் நந்தா லிங்கி குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


