மடானி ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பைத் தேர்தல் பிரச்சாரம் என சாடியுள்ள கெடா மந்திரி பெசார் முஹமட் சனுசி முஹம்மட் நூரின் கருத்துக்கு வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு எதிர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தேர்த்தல் பிரச்சாரம் அல்ல எனவும் இந்தத் திறந்த இல்ல உபசரிப்பு மக்களை நெருங்குவதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளையும் அவர்களின் நிலையையும் நேரில் கண்டறிவதற்கான வாய்ப்பாக உள்ளன என அவர் தெளிவுப்படுத்தினார்.
புத்ரா ஜெயாவில் மட்டும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தினால் நாட்டில் மற்ற பகுதியில் வாழும் மக்கள் எப்படி கலந்து கொள்ள இயலும் என அவர் கேள்வி எழுப்பினார். ஒரு சாரார் மட்டும் அரசாங்க திறந்த இல்ல உபசரிபில் கலந்து கொள்வதில் நியாயமில்லை என முகமட் சாபு தெரிவித்தார்.








