பெர்லீஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய 3 மாநிலங்களில் 6 அணைக்கட்டுகளின் நீரின் மட்டம் வெகுவாக குறைந்து, அபாயக் கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிலிஸ்சில் உள்ள தீமா தாசோஹ், கெடாவில் உள்ள சுங்கை மூடா, பேடு, பேரீஸ், பினாங்கில் உள்ள ஆயர் ஹீதாம், மற்றும் தெலோக் பஹாங் ஆகிய நீர் நிலைகளில், நீரின் மட்டம் வறட்சி நிலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருப்பதாக span எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் தொடர்பில், நடப்பு நிலை மிக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. தற்போது நிலவிவரும் கடும் வெப்பம் காரணமாக நீர் நிலைகளில் வறட்சி சூழல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


