அரசாங்கத்தில் நீண்ட காலம் சேவையாற்றியவர், அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர் மற்றும் போலீஸ் துறைக்கு தலைமையேற்று, உள்துறை அமைச்சராக இருந்தவர், இதற்கு மேலாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இருந்தவர் என்ற முறையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், தலைமறைவாக இருந்த வரும் தனது மருமகன்,நாடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டின் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அடிக்கடி மக்களுக்கு அறிவுரைகளை கூறும் முகைதீன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கண்காணிப்பிலிருந்து தப்பியிருக்கும் தனது மருமகன் முஹமாட் அட்லான் பெர்ஹான், அமலாக்க அதிகாரிகளிடம் சரண் அடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முஹமாட் புவாட் சர்காஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
தூய்மை என்பது நாட்டிற்கு வலியுறுத்துவதற்கு முன்னதாக நமது வீட்டை தூய்மையாக வைத்துக்கெள்ள வேண்டும். அந்த வகையில் மகளின் கணவரை பிடிப்பதற்கு புக்கிட் அமான் போலீசார், பன்னாட்டு போலீஸ் துறையின் உதவியுடன் அவரை பிடிப்பதற்கு இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முகைதீன் கண்டும் காணாமல் மவுனம் சாதித்துக்கொண்டு இருப்பது ஓர் அரசியல்வாதிக்கு அழகு அல்ல என்று முஹமாட் புவாட் சர்காஷி தெரிவித்தார்.
முகைதீன் யாசினின் மருமகன் எந்தவொரு குற்றத்தையும் புரியவில்லை என்றால் எதற்காக தலைமறைவாக இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். முகைதின் யாசினின் மருமகனுடன் ஒர வழக்கறிஞரான மன்சூர் பின் சாட் என்பவரும் தற்போது போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


