Oct 12, 2026
Thisaigal NewsYouTube

ஆஸ்திரேலியா பொதுத் தேர்தலில் பிரதமரை எதிர்த்து தோமி தோமஸ் மகள் போட்டி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆஸ்திரேலியா பொதுத் தேர்தலில் பிரதமரை எதிர்த்து தோமி தோமஸ் மகள் போட்டி

கோலாலம்பூர், ஏப்ரல்.28-

ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல் வரும் மே 3 ஆம் தேதி நடைபெறகிறது. ஆளும் தொழிலாளர் கட்சிக்கும், லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் கடுமை வாய்ந்த இந்தப் பொதுத் தேர்தலில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் போட்டியிடும் Grayndler தொகுதியில் மலேசியாவின் முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் மகள் போட்டியிடுகிறார்.

தோமி தோமஸ் மகள், ஹன்னா தோமஸ், தி கிரின்ஸ் கட்சி சார்பில் ஆஸ்திரேலியப் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். ஆஸ்திரேலியாவில் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஹன்னா தோமஸ் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

சமூகத் தொண்டுகள் மற்றும் நூல்களை எழுதுவதில் பிரபலமாக விளங்கும் ஹான்னா தோமஸ், மலேசியாவில் பிறந்து வளர்ந்து, ஒரு நீடித்த வாழ்வியல் மதிப்பீட்டுப் பின்னணியைக் கொண்டதற்காகப் பெருமைப்படுவதாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹான்னா தோமஸ், அந்நாட்டின் பிரதமரை எதிர்த்து Grayndler தொகுதியில் போட்டியிடுவதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது மூன்று காரணங்களை முன்வைத்தார்.

காஸாவில் நீடித்து வரும் அப்பாவி மக்களுக்கு எதிராக இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ள அடுக்குமுறை மற்றும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலின் கொடுங்கோல் செயல் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் கண்டும் காணாமல் இருந்து வருவது, அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று ஹான்னா தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →