Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய சிலம்பக்குழுவினர் 12 தங்கங்களை வென்றனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய சிலம்பக்குழுவினர் 12 தங்கங்களை வென்றனர்

டோஹா, டிச. 28-

கட்டாரில் இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ஆசிய பொது சிலம்பம் தற்காப்புக்கலை சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசிய சிலம்பக்குழுவினர் 12 தங்கங்ளை வென்று சாதனைப்படைத்துள்ளனர். அத்துடன் ஷாம்பியன்ஷிப் பட்டத்தையும் மலேசிய குழுவினர் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கட்டார் தலைநகர் டோஹாவில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய பொது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் தனித்திறமை, எதிர்த்துப் போராடுதல் ஆகிய பிரிவுகளில் தலா இரண்டு தங்கத்தைப் பெறுவதற்காக மலேசியாவின் ஆறு தேசிய வீரர்கள் கடுமையாக போராடியதுடன் சிறப்பான தற்காப்புக்கலை நுட்பத்தை வெளிப்படுத்தினர் என்று மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் எம். சுரேஷ் தெரிவித்தார்.

தங்கப் பதக்கம் வென்றவர்களில் 60 கிலோவுக்கு மேல் ஆண்கள் பிரிவில் வீரர் பிரகாஷ்சும் அடங்குவர். 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 55 கிலோவிற்கும் 65 கிலோவிற்கும் இடையிலான பிரிவில் சஷ்டிவீனா, 30 கிலோவிற்கும் 40 கிலோவிற்கும் இடையிலான பிரிவில் லீனாஸ்ரீ, 45 கிலோவிற்கும் 55 கிலோவிற்கும் இடையிலான பிரிவில் கவித்திரா, 55 கிலோவிற்கும் 65 கிலோவிற்கும் இடையிலான பிரிவில் டர்னிஷா, 70 கிலோவிற்கும் மேற்பட்ட பிரிவில் ரனிஷா ஆகியோர் தங்கத்தை வென்றனர்.

இந்தப் போட்டிகள் யாவும் 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவாகும் என்று சுரேஷ் விளக்கினார்.

உபசரணை நாடான கட்டார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தை வென்றனர். இந்தியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் வீரர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டதாக டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.

விளையாட்டுப்போட்டியின் நிறைவு விழாவில் கட்டாருக்கான மலேசியத் தூதர் முகமட் பைஸால் ரசாலி கலந்து சிறப்பித்ததாகவும், மலேசிய வீரர்களுக்கு தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டதாக டாக்டர் சுரேஷ் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்